

நடிகை அனுமோள்
தமிழில் கண்ணுக்குள்ளே, சூரன், திலகர் உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை அனுமோள். ‘அயலி’ வெப் தொடரில் நடித்ததன் மூலம் கவனிக்கப்பட்ட இவர், தனிமையில் வாழ்வது குறித்து எந்த வருத்தமும் இல்லை என்றும், சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “நான் காதல் உறவில் இருக்க முயன்றேன். ஆனால் அது வெற்றியடையவில்லை. அதற்காக யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. சில உறவுகள் இயல்பாக நீடிக்காது. அது வாழ்க்கையின் ஒரு பகுதி. ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமையடையத் திருமணம் அவசியம் என்று நம்பவில்லை.
திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரே இலக்காக இருக்கக் கூடாது. நான் தனியாக இருப்பதால் தற்போது சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என்னை நான் புரிந்துகொண்டு, என் வாழ்க்கையை என் விருப்பப்படி வாழ்கிறேன். அதில் எனக்கு நிறைவு இருக்கிறது” என்று தெரிவித்தார்.