

புதுமுகங்கள் அமல் அஜித், ஆதியா, சிங்கம் புலி, புகழ், ஆதவன், ஜீவா உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், ‘கன்னடத்துப் பைங்கிளி’. இதை சாய்ரமணி இயக்கியுள்ளார். இதில் கே.பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு பாக்யராஜும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜும் இணைந்து நடித்த படம் இது.
டி.ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்துள்ளார். ஓசூரில் 1990-களில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கதை அமைக்கப்பட்டுள்ளது. எம்.பி.எம். என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரித்துள்ளார். இதில் டி.ராஜேந்தர் இசையில், முதல் முறையாக இளையராஜா ஒரு பாடலை பாடியுள்ளார்.