‘வெற்றி’​யின் உண்மையான அர்த்தம் இப்​போது​தான் புரிந்தது: சவுந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி

‘வெற்றி’​யின் உண்மையான அர்த்தம் இப்​போது​தான் புரிந்தது: சவுந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி
Updated on
1 min read

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தை இயக்​கிய அபிஷன் ஜீவிந்த், ஹீரோ​வாக நடித்த படம் ‘வித் லவ்’. அனஸ்​வரா ராஜன், காவ்​யா, சரவணன், சச்​சின் நடித்​துள்ள இப்​படத்​துக்கு ஷான் ரோல்​டன் இசையமைத்​துள்​ளார். ஷ்ரே​யாஸ் கிருஷ்ணா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார்.

அறி​முக இயக்​குநர் மதன் இயக்​கிய இப்​படத்தை ஸயான் பிலிம்ஸ் சார்​பில் சவுந்​தர்யா ரஜினி​காந்த், எம்​ஆர்பி என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் பசிலி​யான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலி​யான் தயாரித்​துள்​ளனர். பிப்​.6-ல் வெளி​யான இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்​து, வெற்றி விழா சென்​னை​யில் நடை​பெற்​றது.

விழா​வில் சவுந்​தர்யா ரஜினி​காந்த் பேசும்​போது, “இப்படத்தின் ப்ரீமியர் ஷோ முடிந்து வீட்​டுக்​குச் சென்​ற​போது அப்​பா–அம்மா இரு​வரும் என்னை கட்​டிப்​பிடித்​துச் சிரித்​தார்கள். அப்​போது ‘இது​தான் சக்​சஸ்’ என்று உணர்ந்தேன். அந்த அப்​பா​வின் சிரிப்பை வாழ்க்கை முழுவதும் மறக்க

மாட்​டேன். 16–18 ஆண்​டு​களாக சினிமா பயணத்​தில் இருந்தா​லும், இந்த படத்​தின் மூல​மாகத்தான் வெற்​றி என்ப​தன் உண்​மை​யான அர்த்​தம் புரிந்​தது. இது தான் முதல் சக்​சஸ் மீட்.

இயக்​குநர் மதன் கதை சொன்​ன போதே இது வெற்றி படம் என்ற நம்​பிக்கை வந்​தது. இரண்​டாம் பாதி​யில் வரும் காட்சிகளும், இறு​தி​யில் நான்கு கதா​பாத்​திரங்​களும் ஒரே ஷாட்​டில் சந்​திக்​கும் காட்​சி​யும் முழு​மை​யான டைரக்டர் டச்.

அவரது அடுத்த படத்​துக்கு நாங்​கள் தயா​ராக இருக்கிறோம். இந்த படம் வெறும் ‘நல்ல படம்’ என்ற ஸ்டேட்​டஸை தாண்​டி, மக்​கள் தங்​கள் படமாகக் கொண்டாடு​வது எங்​களுக்கு கிடைத்த மிகப்​பெரிய வெற்றி” என்​றார். படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

‘வெற்றி’​யின் உண்மையான அர்த்தம் இப்​போது​தான் புரிந்தது: சவுந்தர்யா ரஜினி நெகிழ்ச்சி
Thiruchitrambalam: உங்கள் ஷோபனாவை கண்டு கொண்டீர்களா? | திரை தேவதைகள் 05

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in