‘ஜெயிலர் 2’ படத்தில் கவுரவ வேடத்தில் ஹிருத்திக் ரோஷன்

‘ஜெயிலர் 2’ படத்தில் கவுரவ வேடத்தில் ஹிருத்திக் ரோஷன்
Updated on
1 min read

ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர் ’ படம் வெற்றி பெற்றதை அடுத்து அதன் 2-ம் பாகம் உருவாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கும் இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடிக்கின்றனர். இதில் முக்கிய வேடத்தில் நடிக்கத் தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணாவிடம் கேட்டனர். அவர் மறுத்ததை அடுத்து ஷாருக்கான் நடிப்பதாகக் கூறப்பட்டது. அவர் கடைசி நேரத்தில் விலகியதை அடுத்து இப்போது ஹிருத்திக் ரோஷன் நடிக்க இருக்கிறார்.

அவர் தொடர்பான காட்சிகள் இந்த மாத இறுதியில் படமாக்கப்பட இருக்கிறது. நடிகர் ஹிருத்திக் ரோஷன் ‘பகவான் தாதா’ (1986) என்ற இந்திப் படத்தில், ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

‘ஜெயிலர் 2’ படத்தில் கவுரவ வேடத்தில் ஹிருத்திக் ரோஷன்
Spider-Noir: கருப்பு வெள்ளையில் ஒரு ‘க்ளாசிக்’ அனுபவம் | ஓடிடி திரை அலசல்
‘ஜெயிலர் 2’ படத்தில் கவுரவ வேடத்தில் ஹிருத்திக் ரோஷன்
Thigi: ஆழ்மன ‘ரகசிய’ வலி, துணிவைப் பேசும் ஹேமாவும் மகள்களும் | திரை தேவதைகள் 20

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in