பிப்.20-ல் ஓடிடியில் ‘ஹாட் ஸ்பாட் 2’ ரிலீஸ்

பிப்.20-ல் ஓடிடியில் ‘ஹாட் ஸ்பாட் 2’ ரிலீஸ்
Updated on
1 min read

பிப்ரவரி 20-ம் தேதி ஓடிடி தளங்களில் ‘ஹாட் ஸ்பாட் 2’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவான படம் ‘ஹாட் ஸ்பாட் 2’. ஜனவரி 23-ம் தேதி வெளியான இப்படம் இணையத்தில் பல்வேறு விவாதங்களை உருவாக்கியது. படத்தின் உரிமைகள் விற்பனையின் மூலம் லாபம் ஈட்டிவிட்டது படக்குழு. மேலும், திரையரங்குகளிலும் போதுமான வசூலும் செய்தது.

தற்போது இப்படம் பிப்ரவரி 20-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ப்ரைம் வீடியோ, ஆஹா, சிம்பிளி சவுத், ஏபி இண்டர்நேஷனல், லைன்ஸ் கேட் ப்ளே மற்றும் ஷார்ட் பிளிக்ஸ் ஆகிய தளங்களில் ‘ஹாட் ஸ்பாட் 2’ வெளியாக இருக்கிறது. ஓடிடி வெளியீட்டுக்கு பின்பும் இணையத்தில் மேலும் விவாதத்தை உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

’ஹாட் ஸ்பாட் 2’ படத்துக்குப் பிறகு, விக்னேஷ் கார்த்திக்கின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், அதிகாரபூர்வமாக இன்னும் எதுவும் கையெழுத்தாகவில்லை.

பிப்.20-ல் ஓடிடியில் ‘ஹாட் ஸ்பாட் 2’ ரிலீஸ்
தமிழக இடைக்கால பட்ஜெட் 2026: முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in