ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Updated on
1 min read

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

‘கடைசி உலகப் போர்’ படத்தினைத் தொடர்ந்து, இசை நிகழ்ச்சியில் தீவிர கவனம் செலுத்தி வந்தார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இந்நிலையில், அப்படத்தினை தொடர்ந்து மீண்டும் அவரே இயக்கி, நாயகனாக நடித்து வந்தார். இதனை சுந்தர்.சி தயாரித்து வந்தார். இப்படம் ‘மீசைய முறுக்கு 2’ என்று சமீபத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஹிப் ஹாப் தமிழா ஆதி அறிவித்தார்.

இன்று அவரது பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு ‘மீசைய முறுக்கு 2’ படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை வெளியிடப்பட்டுள்ளன. இதன் டீஸரைப் பார்க்கும் போது, ஹிப் ஹாப் இசை மற்றும் இசையமைப்பாளராக உருவான பயணத்தை வைத்து இதன் கதையை அவர் உருவாக்கியிருக்கிறார் என்பது தெரிகிறது.

இதில் சைத்ரா அச்சர், பாபா பாஸ்கர், ஹர்சத் கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம் மற்றும் மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக ஆலிவர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை ஆகியவற்றை கவனித்த அவரே இயக்கியும் உள்ளார். இப்படம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைவு: இன்றைய நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in