“கன​வாகத் தொடங்​கி, உணர்வாக மாறியது” - ‘மீசைய முறுக்கு 2’ பற்றி ஹிப் ஹாப் ஆதி

“கன​வாகத் தொடங்​கி, உணர்வாக மாறியது” - ‘மீசைய முறுக்கு 2’ பற்றி ஹிப் ஹாப் ஆதி
Updated on
1 min read

இசையமைப்​பாள​ராக அறி​முக​மான ஹிப் ஹாப் ஆதி, கடந்த 2017-ம் ஆண்டு இயக்கி நடித்த படம், ‘மீசைய முறுக்​கு’. இந்​தப் படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்​து, இதன் அடுத்த பாகம் உருவாகி​யுள்​ளது. ஹிப் ஹாப் ஆதி இயக்​கி, ஹீரோ​வாக நடித்துள்ள இப்​படத்​தில், சைத்ரா ஆச்​சர், கேதிகா ஷர்​மா, ரம்யா ரங்​க​நாதன் ஆகியோர் கதா​நாயகி​களாக நடித்​துள்​ளனர்.

மேலும் ஹர்​ஷத் கான், கருணாஸ், நாசர், ஆடு​களம் நரேன், கருணாகரன் உள்​ளிட்ட பலர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்​ளனர். அவ்னி மூவீஸ் மற்​றும் பென்ஸ் மீடியா சார்​பில் குஷ்பு சுந்​தர், ஏ.சி.எஸ். அருண்​கு​மார் தயாரித்துள்ள இப்​படம் செப்.25-ல் வெளியாகிறது.

இது பற்றி ஹிப்​ஹாப் தமிழா ஆதி, “ஒரு கனவாகத் தொடங்​கியது, இன்று கோடிக்​கணக்​கான மக்​களின் உணர்​வாக மாறி​யுள்​ளது. அந்த மாயா ஜாலத்தை மீண்​டும் ஒரு முறை ‘மீசைய முறுக்கு 2’ மூலம் அனுபவிக்க வேண்​டிய நேரம் வந்து விட்​டது” என்று தெரிவித்​துள்​ளார்.

ஏற்​கெனவே வெளி​யாகி​யுள்ள இப்​படத்​தின், ‘பப்​பாளி பழமே’, ‘கோ​யிந்​தம்​மா’, ‘அடி போடி’ உள்​ளிட்ட பாடல்​கள் ஹிட்​டான நிலை​யில், “தோற்​பே​னா... ஜெ​யிப்​பே​னா’ங்​கிறது முக்கியமில்லை. கடைசி வரைக்​கும் முயற்சி பண்​ணுவேன்” என்கிற வசனத்​துடன் வெளியாகி​யுள்ள ரிலீஸ் தேதி அறி​விப்பு டீஸர் வரவேற்​பைப் பெற்​றுள்​ளது.

“கன​வாகத் தொடங்​கி, உணர்வாக மாறியது” - ‘மீசைய முறுக்கு 2’ பற்றி ஹிப் ஹாப் ஆதி
GARGI: ஒற்றைக் கேள்வியில் நியாயத் தீர்ப்பு எழுதிய கார்கி | திரை தேவதைகள் 28

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in