

ஹரிஹரன் ராம் இயக்கிய ‘ஜோ’, சீனு ராமசாமி இயக்கிய ‘கோழிப்பண்னை செல்லதுரை’ ஆகிய திரைப்படங்கள் மூலம் பிரபலமான ஏகன், அடுத்து நடிக்கும் படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிக்கின்றனர். தெலுங்கு நடிகை ஸ்ரீதேவி, மலையாள நடிகை ஃபெமினா ஜார்ஜ் கதாநாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.
இந்நிலையில் தயாரிப்பாளர் மேத்யூ அருளானந்துவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் தலைப்பையும் முதல் தோற்றப் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்துக்கு ‘ஹைக்கூ’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் உருவாகிறது.