

லண்டனில் உள்ள புகழ்பெற்ற லெஸ்டர் சதுக்கத்தில், ‘தில்வாலே துல்கானியா லே ஜாயங்கே’ என்ற இந்திப் படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் ஆகியோரின் கதாபாத்திர சிலை நிறுவப்பட்டுள்ளது.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் லெஸ்டர் சதுக்கம். இங்கு ‘சீன்ஸ் இன் தி ஸ்கொயர்’ என்ற பெயரில் பிரபல திரைப்பட கதாபாத்திரங்களின் சிலைகள் இடம் பெற்றுள்ளன.
ஹாரி பாட்டர், பேட்மேன், மிஸ்டர் பீன், வொண்டர் வுமன், சிங் இன் தி ரெயின் உள்ளிட்ட பல கதாபாத்திரங்களின் சிலைகள் இங்கு நிறுவப்பட்டுள்ளன. இந்த வரிசையில் ‘தில்வாலே துல்கானியா லே ஜாயங்கே’ என்ற இந்தி படத்தில் நடித்த ஷாருக்கான், கஜோல் கதாபாத்திரங்களின் வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த திரைப்படம் ஒன்றுக்காக இங்கு சிலை வைக்கப்படுவது இதுதான் முதன்முறை. இந்தச் சிலை திறப்பு விழாவில் ஷாருக்கானும் கஜோலும் கலந்து கொண்டார்கள்.
யாஷ் சோப்ரா தயாரிப்பில் ஆதித்யா சோப்ரா இயக்கி 1995-ம் ஆண்டு வெளியான இப்படம் மும்பையில் உள்ள மராத்தா மந்திர் திரையரங்கில் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் கஜோல், சிம்ரன் என்ற கதாபாத்திரத்திலும் ஷாருக்கான், ராஜ் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர்.