

இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் ஹாரர் த்ரில்லர் படத்துக்கு ‘13’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.
இதில் பவ்யா திரிகா, ஆதித்யா கதிர், ஐஸ்வர்யா, ஆதியா பிரசாத் உள்பட பலர் நடிக்கின்றனர். மெட்ராஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை விவேக் கே இயக்குகிறார். சித்துக்குமார் இசை அமைக்கிறார். சி.எம். மூவேந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
படம் பற்றி இயக்குநர் விவேக் கே கூறும்போது, “உண்மைச் சம்பவங்களின் சாயலில், அடர்ந்த காட்டின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள படம் இது. இருளுக்குள் மறைந்திருக்கும் ‘13’ என்ற எண்ணின் மர்மமும், சாத்தானின் பிடியில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களின் போராட்டமும் ஒவ்வொரு விநாடியும் பதற்றத்தை ஏற்படுத்தும். டிசம்பரில் படத்தை வெளியிட இருக்கிறோம்” என்றார்.