

ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இயக்கி வரும் ‘கிராண்ட் ஃபாதர்’ படத்தின் படப்பிடிப்பு 45 நாட்களில் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளது.
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வந்த படம் ‘கிராண்ட் ஃபாதர்’. இதில் எம்.எஸ்.பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்கள். இதன் படப்பிடிப்பை ஒரே கட்டமாக சென்னை மற்றும் புதுச்சேரி சுற்றியுள்ள பகுதிகளில் 45 நாட்களில் நடத்தி முடித்துள்ளது படக்குழு.
ஃபேன்டஸி, ஆக்ஷன், டிராமா, ஹாரர், காமெடி என அனைத்தும் சேர்ந்த கதையாக இப்படம் அமைந்துள்ளது. இப்படத்தின் மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகிறார் ஃப்ராங்க் ஸ்டார் ராகுல். இதில் தெலுங்கு நடிகர் சுனில், ஸ்மீகா, அருள் தாஸ் , முனீஸ்காந்த் ,ஸ்ரீநாத் ,சிவா அரவிந்த் , பிரியதர்ஷினி , மைம் கோபி, ஹரீஷ் பேரடி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இதன் ஒளிப்பதிவாளராக சந்தானம், இசையமைப்பாளராக ரஞ்சின் ராஜ் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். தற்போது இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.