“நல்ல இயக்​குநரும் தயாரிப்பாளரும் எப்போதும் ஜெயிக்க வேண்​டும்” - சசிகுமார் ஆசை

“நல்ல இயக்​குநரும் தயாரிப்பாளரும் எப்போதும் ஜெயிக்க வேண்​டும்” - சசிகுமார் ஆசை
Updated on
1 min read

ராஜு முரு​கன் இயக்​கத்​தில் சசிகுமார் நடித்​துள்ள படம், ‘மை லார்ட்’. சைத்ரா ஜே. ஆச்​சார், ஜெயப்​பிர​காஷ், குரு சோமசுந்​தரம், ஆஷா சரத், கோபி நயி​னார் உள்​ளிட்ட பலர் நடித்​துள்​ளனர். பிப். 13-ல் வெளி​யான இப்​படம் வரவேற்​பைப் பெற்​றதை அடுத்து இதன் வெற்றி விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர்.

நடிகர் சசிகு​மார் பேசும்​போது, “இந்​தப் படத்​தில் நடிக​ராக, என்னை இன்​னொரு வித​மாக மாற்​றிக் காட்​டி​யிருக்​கிறார் ராஜு முரு​கன். எல்​லா​வற்​றை​யும் நான் பார்த்​துக்​கொள்​கிறேன் என சொல்லக் கூடிய தயாரிப்​பாளர் அம்​பேத்குமாரின் மனது பெரிய விஷ​யம்.

நல்ல இயக்​குநரும், நல்ல தயாரிப்​பாள​ரும் தோற்​றுப் போகக் கூடாது. எப்​போதும் ஜெயிக்க வேண்​டும் என்​பது​தான் என் எண்​ணம். முதல் நாள் கலெக் ஷனை பார்த்​து​விட்டு எல்​லோருக்​கும் பயம் வந்​தது, ஆனால் எனக்கு தைரிய​மாக இருந்​தது. ஏனென்​றால் எல்​லாருமே நல்ல படம் எனச் சொன்​னார்கள்.

அது கண்​டிப்​ பாக மக்​களிடம் சேரும் என்ற நம்​பிக்கை எனக்கு இருந்​தது. அது நடந்​துள்​ள​தில் மகிழ்ச்​சி. ‘அயோத்​தி’ படத்​தில் நான் பார்த்த அனுபவம் தான் எனக்கு இந்த தைரி​யத்​தைக் கொடுத்​தது. அந்​தப்​பட​மும் இரண்​டாவது, மூன்​றாவது வாரத்​தில்தான் வசூலை எடுத்தது. அதே மாதிரி இந்​தப் படமும் கண்​டிப்​பாக எடுக்​கும் என்ற நம்பிக்கை இருக்​கிறது” என்​றார்.

“நல்ல இயக்​குநரும் தயாரிப்பாளரும் எப்போதும் ஜெயிக்க வேண்​டும்” - சசிகுமார் ஆசை
“மாநிலத்தையே அடகு வைத்தவர் பழனிசாமி” - கனிமொழி தாக்கு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in