

கவுதம் வாசுதேவ் மேனன் புதிய படமொன்றை இயக்கி வருகிறார்.
‘துருவ நட்சத்திரம்’ படத்தினை வெளியிட்டுவிட்டு தான், புதிய படத்தினை இயக்குவேன் என்று அறிவித்திருந்தார் கவுதம் வாசுதேவ் மேனன். ஆனால், அப்படத்தின் பிரச்சினைகள் முடிந்தபாடு இல்லை. இதனால் எவ்வித அறிவிப்பும் இல்லாமல் புதிய படமொன்றை இயக்கி வருகிறார் கவுதம் வாசுதேவ் மேனன்.
இந்த புதிய படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் தெரியவில்லை.
ஆனால், இப்படத்தின் நாயகனாக ‘டபுள் ஆக்குபென்சி’ படத்தில் நடித்த சந்தோஷ் நடித்து வருவதாக தெரிகிறது. இதன் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, ‘துருவ நட்சத்திரம்’ படத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டுவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் கவுதம் வாசுதேவ் மேனன். இதற்காக பைனான்சியர்களிடம் பேசுவது உள்ளிட்ட பணிகளையும், புதிய படத்தின் படப்பிடிப்புக்கு இடையே கவனித்து வருகிறார்.