ரோட்டர்டாம் சர்வதேச பட விழாவுக்கு ‘டோரதி’ தேர்வு

ரோட்டர்டாம் சர்வதேச பட விழாவுக்கு ‘டோரதி’ தேர்வு
Updated on: 
1 min read

கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ படம், ரோட்டர்டாம் சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளது. இதன் மூலம் அப்படத்துக்கு மீண்டும் ஒரு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவரது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘மதிப்புமிக்க ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் திரையிடுவதற்கு ‘டோரதி’ படம் தேர்வாகி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இளையராஜா இசையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ‘டோரதி’ படம் செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் முதன்மை கதாபாத்தித்தில் நடித்திருந்தனர்.

பால்மாற்றம் குறித்தும் சமூகம் அதனை எதிர்கொள்ளும் விதம் குறித்தும் 1990 களின் மதுரை பின்னணியில் இந்தப் படம் பேசியது. வெள்ளித்திரையில் படம் வெளியானதில் இருந்து பெரும் விவாதத்தையும் பரவலான வரவேற்பையும் பெற்றது. அதேபோல் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. 

இப்படம் திரையில் வெளியாவதற்கு முன்பே டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டினைப் பெற்றது.

இந்தநிலையில், நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம் நகரத்தில் 2027-ல் நடைபெற இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த 56-வது சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் திரையிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக ‘டோரதி’ படம் தேர்வாகி உள்ளது.

ரோட்டர்டாம் சர்வதேச பட விழாவுக்கு ‘டோரதி’ தேர்வு
‘எங்களின் அழகான ஆண் குழந்தை...’ - நடிகை சமந்தா பகிர்வு

X