‘தர்மன்’ படத்தில் மீண்டும் இணைகிறதா ‘சிவாஜி’ ஜோடி?

‘தர்மன்’ படத்தில் மீண்டும் இணைகிறதா ‘சிவாஜி’ ஜோடி?
Updated on
1 min read

‘தர்மன்’ படத்தில் ரஜினி - ஸ்ரேயா இருவரும் இணைந்து நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘சிவாஜி’ படத்தில் ரஜினி - ஸ்ரேயா இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். தற்போது ‘தர்மன்’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினிகாந்த். அந்தப் படத்தின் கெட்டப்பில் ஸ்ரேயா உடன் எடுக்கப்பட்ட செல்ஃபியில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்படத்தை வைத்து ரஜினி - ஸ்ரேயா இருவரும் 17 ஆண்டுகள் கழித்து இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹைதராபாத்தில் ரஜினி - ராம் பொத்தினேனி உள்ளிட்ட பலர் பங்குபெறும் காட்சிகளை படமாக்கி வருகிறார் அஸ்வத் மாரிமுத்து. ‘தர்மன்’ படத்தில் ஸ்ரேயா நடிக்கிறாரா என்பது குறித்து படக்குழுவினரும் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை.

ராஜ்கமல் நிறுவனம் தயாரித்து வரும் ‘தர்மன்’ படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இதற்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்து வருகிறார். 2027-ம் ஆண்டு இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

‘தர்மன்’ படத்தில் மீண்டும் இணைகிறதா ‘சிவாஜி’ ஜோடி?
இரண்டு நாட்களுக்குள் முடிந்த மெக்கே டெஸ்ட்: ஆடுகளம் குறித்து கவாஸ்கர் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in