

பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் திவ்யா கணேஷ்.
100 நாட்களைக் கடந்து ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில் விக்கல்ஸ் விக்ரம், விஜே பார்வதி, கம்ருதீன், ஆரோரா சின்க்ளேர், வாட்டர்மெலன் திவாகர் உள்ளிட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். 30 நாட்களுக்குப் பிறகு வைல்டு கார்டு போட்டியாளர்களாக திவ்யா கணேஷ், அமித் பார்கவ், பிரஜின் சாண்ட்ரா ஆகிய நால்வரும் உள்ளே சென்றனர்.
வாரம் ஒரு போட்டியாளர் அல்லது இரண்டு பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், டிக்கெட் டூ ஃபினாலே போட்டியின்போது சாண்ட்ராவிடம் வன்முறையாக நடந்து கொண்ட காரணத்தால் வார இறுதியில் பார்வதி, கம்ருதீன் இருவரும் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டனர். டிக்கெட் டூ ஃபினாலே ஆரோராவுக்கு கிடைத்தது.
இந்த நிலையில் விக்ரம், திவ்யா, சபரிநாதன், ஆரோரா நால்வரும் இறுதிப் போட்டியில் நுழைந்தனர். இவர்களில் முதலில் ஆரோரா, அடுத்து விக்ரம் வெளியேறினர். திவ்யா, சபரி இருவரும் ஃபினாலே மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். சபரி ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து வெற்றியாளராக அறிவிக்கப்படும் இரண்டாவது போட்டியாளர் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார். இதற்கு முன் 7-வது சீசனில் அர்ச்சனா வைல்டு கார்டில் நுழைந்து வெற்றி பெற்ற முதல் போட்டியாளர் ஆவார்.