‘பராசக்தி’ பட சம்பளப் பாக்கி: இயக்குநர் சுதா கொங்கரா வழக்கு

இயக்குநர் சுதா கொங்கரா

இயக்குநர் சுதா கொங்கரா

Updated on
1 min read

ப​ராசக்தி படத்தை இயக்​கிய வகை​யில் தனக்கு வழங்க வேண்​டிய சம்பள பாக்கி ரூ. 8.39 கோடியை வழங்​கக்​கோரி இயக்​குநர் சுதா கொங்​கரா தொடர்ந்​துள்ள வழக்​கில், படத்​த​யாரிப்பு நிறு​வனம் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிவ​கார்த்​தி​கேயன், ஸ்ரீலீலா, அதர்​வா, ரவி மோகன் நடித்​துக் கடந்த ஜனவரி மாதம் வெளி​யான திரைப்​படம், ‘பராசக்​தி’. ஆகாஷ் பாஸ்​கரனின் டான் பிக்​சர்ஸ் தயாரித்த இப்​படத்​தைச் சுதா கொங்​கரா இயக்​கி​னார். அவருக்கு ரூ.15 கோடி சம்​பளம் பேசப்​பட்டு ஒப்​பந்​தம் செய்த நிலை​யில் ரூ.8.39 கோடியை வழங்காமல் பாக்கி வைத்​துள்​ள​தாக​வும், எனவே அந்த தொகையை வழங்​கு​மாறு படத்​த​யாரிப்பு நிறு​வனத்​துக்கு உத்​தர​விடக் கோரி, சுதா கொங்​கரா சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

மேலும் அந்த மனு​வில், “தனக்​கான சம்​பளப் பாக்​கியை வழங்காமல், டான் பிக்​சர்ஸ் தயாரிப்​பில் அதர்வா நடித்​துள்ள ‘இதயம் முரளி’ படத்தை வெளி​யிடத் தடை விதிக்க வேண்​டும். ‘பராசக்​தி’ படத்​தின் மூன்​றாம் நபருக்​கான உரிமையை வழங்கவும் தடை விதிக்க வேண்​டும். ‘பராசக்​தி’ படத்தை ஓடிடி மூல​மாக வெளி​யிட்​டதன் மூலம் கிடைத்த வரு​மானத்​தின் முழு விவரங்​களை​யும் நீதி​மன்​றத்​தில் சமர்ப்​பிக்க உத்​தர​விட வேண்டும்” எனக் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கை விசா​ரித்த நீதிபதி கே.குமரேஷ் பாபு, இது தொடர்பாக படத்​த​யாரிப்பு நிறு​வனம் ஜூலை 8-க்​குள் பதிலளிக்க உத்​தர​விட்டு விசா​ரணை​யைத் தள்ளி வைத்​துள்​ளார்​.

<div class="paragraphs"><p><em>இயக்குநர் சுதா கொங்கரா</em></p></div>
Niharika - in the mist: இருளிச்சைகளின் சுடரி தீபா | திரை தேவதைகள் 24

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in