பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் மகன் அர்ஜித் ஷங்கர் கதாநாயகனாக அறிமுகமாகும் படம், ‘லவ்வர் பாய்’.
கிருத்தி ஷெட்டி நாயகியாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் அசோக்குமார் இயக்குகிறார். இவர் அட்லியிடம் பணியாற்றியவர். சுதன் சுந்தரத்தின் பேஷன் ஸ்டூடியோஸ், வெங்கட் கே நாராயணாவின் கேவிஎன் புரொடக் ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.
இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர்கள் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹெச்.வினோத், அபிஷன் ஜீவிந்த், தயாரிப்பாளர்கள் லலித் குமார், பைவ்ஸ்டார் செந்தில், நடிகை அதிதி ஷங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது, “பேஷன் ஸ்டூடியோ மூலம், வளர்ந்து வரும் திறமையாளர்களையும் தரமான கதைகளையும் தொடர்ந்து ஆதரித்து வருகிறோம். ‘லவ்வர் பாய்’ கதையைக் கேட்டபோதே இயக்குநர் அசோக்குமார் மீது நம்பிக்கை வந்துவிட்டது. பார்வையாளர்களுக்கும் இந்தக்கதை நிச்சயம் மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்” என்றார்.