மேகேதாட்டு அணையை தடுக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்போம்: திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு

மேகேதாட்டு அணையை தடுக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்போம்: திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு
Updated on
2 min read

சென்னை: மேகே​தாட்டு அணையை தடுக்​கும் தமிழக அரசின் முயற்​சிகளுக்கு துணை நிற்​போம் என்று சட்​டப்​பேர​வை​யில் திமுக, அதி​முக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் தங்களது முழுமையான ஆதரவைத் தெரி​வித்​துள்​ளன.

எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநிதி ஸ்டா​லின் (தி​முக): நீண்​ட​கால சட்ட, அரசி​யல் போராட்​டங்​களை நடத்​தி​தான் நாம் காவிரி மீதான உரிமையை பெற்​றெடுத்​தோம். ஆனால் அதைப் பறிக்​கும் வகை​யில் கர்​நாடக அரசு, மேகே​தாட்​டு​வில் அணை​கட்​டும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வரு​கிறது. இதற்கு எதி​ராக முதல்​வர் கொண்டு வந்​துள்ள தீர்​மானத்தை வரவேற்​கிறோம். சட்​டரீ​தி​யாக​வும், பிரதமர் மூல​மாக​வும் அரசு எடுக்​கும் முயற்​சிகளுக்கு திமுக துணை நிற்​கும்.

இந்​தாண்டு மேட்​டூர் அணை திறக்​காத​தால், டெல்டா விவ​சா​யிகள் சிரமத்​தில் உள்​ளனர். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அடுத்த காவிரி ஆணையக் கூட்​டத்​தில் உறு​தி​யாக பேசி, நமக்​கான தண்​ணீர் பங்​கீட்டை பெறவேண்​டும். இந்த தீர்​மானத்தை அனைத்து எம்​எல்​ஏக்களும், எம்​.பி.க்​களும் இணைந்து குழு​வாகச் சென்று மத்​திய அரசிடம் வழங்கி நமது ஒற்​றுமையை வெளிப்​படுத்த வேண்​டும். இதற்கு திமுக முழு ஆதரவை வழங்கும். அரசி​யல் வேறு​பாடு​களை கடந்து தமிழக அரசு முன்​வர​வேண்​டும்.

முன்​னாள் முதல்​வர் பழனி​சாமி (அதி​முக): மேகே​தாட்டு அணை கட்​டப்​படு​வதை தடுப்​ப​தற்​கான பல்​வேறு நடவடிக்​கைகள் அதி​முக ஆட்​சிக் காலத்​தில்​தான் எடுக்​கப்​பட்​டன. அணை கட்​டி​னால் காவிரி படுகை பாலை​வன​மாகி​விடும். இரு மாநில நல்​லுறவை சீர்​குலைக்​கும் நோக்​கில் கர்​நாடக அரசு அணை கட்ட முயற்​சிப்​பது கண்​டிக்​கத்​தக்​கது. நீண்ட சட்​டப்​போ​ராட்​டத்​தின் அடிப்​படை​யில் நிலைநிறுத்​தப்​பட்ட உரிமையை பாது​காக்க வேண்​டியது நம் கடமை. எனவே, அரசின் தனித்​தீர்​மானத்தை அதி​முக ஆதரிக்​கிறது.

அமைச்​சர் ராஜேஷ்கு​மார் (காங்​கிரஸ்): மேகே​தாட்டு அணை கட்​டப்​பட்​டால் தமிழக விவ​சா​யிகளின் எதிர்​காலம், காவிரிக்​கூட்டு குடிநீர் திட்​டம் கேள்விக்​குறி​யாகும். கர்​நாட​கா​வின் ஒருதலைபட்​ச​மான நடவடிக்​கையை காங்​கிரஸ் கண்​டிக்​கிறது. அரசு எடுக்​கும் நடவடிக்​கைகளுக்கு காங்​கிரஸ் முழு ஆதரவை தெரிவிக்​கிறது.

சவுமியா அன்​புமணி (பாமக): மேக​தாட்டு அணை விவ​காரத்தை மிகப்​பெரும் பிரச்சி​னை​யாக எடுத்​துக்​கொள்ள வேண்​டும். காவிரி நீர் படு​கை​யில் கர்​நாடக அரசு எந்த வித​மான அணை​யை​யும் கட்ட அனு​ம​திக்​கக் கூடாது. முதல்​வர் கொண்டு வந்​துள்ள தீர்​மானத்​துக்கு முழு ஆதர​வு.

டி.​ராமச்​சந்​திரன் (இந்​திய கம்​யூனிஸ்ட்): தீர்​மானத்தை ஆதரிக்​கிறோம். காங்​கிரஸ் கட்​சியை சேர்ந்​தவர்​களும் அமைச்​சர​வை​யில் இடம்​பெற்​றுள்​ளனர். அவர்​களின் அரசு​தான் கர்​நாட​கா​வில் ஆட்​சி​யில் உள்​ளது. பிரச்​சினையை சரிசெய்ய தமிழக காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் முயற்​சிக்க வேண்​டும்.

செல்​லசு​வாமி (மார்க்​சிஸ்ட்): தீர்​மானத்தை மார்க்​சிஸ்ட் கட்சி வரவேற்​கிறது. இந்த நீதிக்​காக, விவ​சா​யிகளின் நியா​யத்​துக்​காக தொடர்ச்​சி​யாக சட்​டப்​பேரவை தலை​யிட வேண்​டும்.

அமைச்​சர் வன்​னியரசு (விசிக): வரலாற்​றுச் சிறப்​புமிக்க தீர்​மானம். விசிக சார்​பில் இதை வரவேற்​கிறோம். தமிழர் உரிமை காக்க விசிக துணை​யாக இருக்​கும்.

பிரேமலதா (தே​மு​தி​க): நீரில் தன்​னிறைவு பெற்ற மாநில​மாக தமிழகம் மாறவேண்​டும். தமிழகத்​தில் வாய்ப்​புள்ள இடங்​களிலே நதி​களை இணைக்க வேண்​டும். மழைநீர் வீணாக கடலில் கலப்​பதை தடுக்க வேண்​டும்.

தி.​மு.​ராஜேந்திரன் (மதி​முக): நமது உரிமையை பாது​காக்க தயங்​க​மாட்​டோம் என்​பதை அண்டை மாநிலத்​துக்​கும், மத்​திய அரசுக்​கும் உணர்த்​தும் வகை​யில் கொண்​டு ​வரப்​பட்ட தீர்​மானத்தை மதி​முக முழுமையாக வரவேற்​கிறது.

எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா (மமக): முதல்​வர் இதுகுறித்து அனைத்​துக் கட்சி கூட்​டத்தை நடத்தி பிரதமரை நேரடி​யாக டெல்​லி​யில் சந்​தித்து தமிழக மக்​களின் உணர்​வு​களை, பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானத்தை எடுத்​துரைக்க வேண்​டும். அரசு கொண்டு வந்த தீர்​மானத்தை வரவேற்​கிறேன்.

தமி​முன் அன்​சாரி (மஜக): அணை கட்​டும் முயற்சி உச்ச நீதி​மன்​றத்​தின் தீர்ப்​புக்கு எதி​ரானது. தீர்​மானத்தை எங்​கள் கட்​சி​யின் சார்​பில் வழிமொழிகிறேன்.

கே.நித்​யானந்​தன் (கொமதேக): அரசு எடுக்​கும் அனைத்​து நியாய​மான நடவடிக்​கைகளுக்​கு துணை​யாக இருப்​போம்​. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

மேகேதாட்டு அணையை தடுக்கும் அரசின் முயற்சிக்கு துணை நிற்போம்: திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு
“வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது” - அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in