

இயக்குநர் ரவி அரசு
அதர்வா நடித்த ‘ஈட்டி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ரவி அரசு. வெற்றி மாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், தொடர்ந்து ‘ஐங்கரன்’ என்ற படத்தையும் இயக்கினார்.
அடுத்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தை இயக்கிய அவர், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்தப் படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அவர் ‘பைவ் சி’ஸ் பிலிம்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்நிறுவனம், நான் இயக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் திரைப்படப் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படும்” என்று தெரிவித்துள்ளார்.