‘நூறுசாமி’ படத்தில் தர்மம் இருக்கிறது: மிஷ்கின் புகழாரம்

இயக்​குநர் மிஷ்கின்

இயக்​குநர் மிஷ்கின்

Updated on
1 min read

சசி இயக்​கத்​தில் விஜய் ஆண்​டனி, சுவாசி​கா, அஜய் திஷான், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ் என பலர் நடித்​துள்ள படம் ‘நூறுசாமி’.

உண்​மைச் சம்​பவத்தை தழுவி உரு​வாகி​யுள்ள இப்​படம் ஜூன் 19-ல் வெளி​யாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சி சென்னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி ​மாறன், பா.ரஞ்​சித், ஏ.ஆர்​.​முரு​க​தாஸ், சரண், லிங்​கு​சாமி, கார்த்​திக் சுப்​பு​ராஜ், மிஷ்கின் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.

இயக்​குநர் மிஷ்கின் பேசும்​போது, "நான் சசி​யிடம் உதவியாளராகச் சேர்​வதற்​காக அவரை சந்​தித்​தேன். அவர் பத்து நிமிடம் பேசி​விட்​டு, தற்​போது வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்​டார்.

மனிதர்​களை உற்​றுப் பார்த்​துக் கவனித்து அவர்​களுக்கு ஏதாவது பிரச்​சினை​யா? என்​பதை தாயுள்​ளத்​துடன் பார்க்​கக்​கூடியவர் சசி. நான் ஆண்​களிடம் அதிசய​மாகப் பார்க்கும் விஷ​யம் என்னவென்றால், அந்த ஆண்​களிடம் இருக்கும் பெண்​மைத் தன்​மை.

பெண்​மைத் தன்மை யாரிடமெல்​லாம் அதி​க​மாக இருக்​கிறதோ, அவர்​கள் எல்​லாம் மிகச் சிறப்​பானவர்​கள். இளை​ய​ராஜா - ஏ.ஆர்.ரஹ்​மான் போன்​றவர்​களிடம் இது​போன்ற பெண்​மைத் தன்மை அதி​க​மாக இருக்​கும். இதனால் தான் இவர்​கள் சிறந்த படைப்​பாளி​களாக இருக்​கிறார்​கள். அப்​படி​யானதொரு மிகச் சிறந்த பெண்மை தன்​மை​யுடன் மனித நேயம் கொண்​ட​வர் தான் சசி.

நாங்​கள் இந்​தப் படத்​தைப் பார்த்​தோம். விவா​தித்​தோம். இந்​தப் படத்​தின் திரைக்​கதை மீது எனக்கு மாறு​பட்ட பார்வை இருக்கிறது. அதைப்​பற்றி சசி​யிடம் தனி​யாக விவா​திப்​பேன். இந்தப் படத்​தில் ஒரு தர்​மம் இருக்​கிறது. இந்த சமு​தா​யத்​தின் விதிகளை எழு​திய ஆண்​கள், சட்ட திட்​டங்​களை எழு​திய ஆண்கள், நாம் வாழும் வீதி​களில் இறக்​காமல் புதைக்​கப்​பட்ட பெண்​களை எப்​படிப் பார்த்​துக் கொள்ள வேண்​டும்? என்​பதை இந்தப் படம் சொல்​கிறது” என்​றார்.

<div class="paragraphs"><p><em>இயக்​குநர் மிஷ்கின்</em></p></div>
Maa Behen: சமூகம் உருவாக்கிய ‘சூனியக்காரிகள்’ ரேகா, ஜெயா, சுஷ்மா | திரை தேவதைகள் 21

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in