மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கும் மாரி செல்வராஜ்

மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கும் மாரி செல்வராஜ்
Updated on
1 min read

‘வாழை’ படத்தை தொடர்ந்து மீண்டும் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

தான் இயக்கிய ‘வாழை’ படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் மாறினார் மாரி செல்வராஜ். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் படம் ஒன்றை தயாரிக்கவுள்ளார். அப்படத்தை அவரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அரவிந்த் இயக்கவுள்ளார். இதில் அமீர், ஸ்வாசிகா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படத்தையும் முடிக்கவுள்ளது படக்குழு. இதில் கதை, திரைக்கதையில் பணிபுரிந்துள்ளார் மாரி செல்வராஜ். இதன் படப்பூஜை சமீபத்தில் முடிவுற்று படத்தின் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. அமீருடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

தனுஷ் படத்தை இயக்கும் முன்பு, ‘வாழை 2’ படத்தை தயாரித்து இயக்க திட்டமிட்டுள்ளார் மாரி செல்வராஜ். இதில் கதிர், கயாடு லோஹர், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள். இப்படத்தை இயக்கி, தயாரிப்பது மட்டுமன்றி, அவருடைய உதவி இயக்குநர் அரவிந்த் படத்தை மாரி செல்வராஜ் தயாரிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் தயாரிப்பாளராக களமிறங்கும் மாரி செல்வராஜ்
“விஜய்க்கு கதை சொல்லி... சூர்யா என்ட்ரி ஆகி...” - ‘கருப்பு’ உருவான கதை பகிர்ந்த ஆர்.ஜே.பாலாஜி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in