

‘அறம்’ படத்தை இயக்கிய கோபி நயினார், அடுத்து ‘மனுஷி’ படத்தை இயக்கியுள்ளார். இதற்கிடையே அவர் இயக்கியுள்ள திரைப் படம் ‘காலனி’.
ராதிகா இதில் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். அஞ்சலி நாயர், எம்.எஸ்.பாஸ்கர், சேத்தன், ஆர்.கே.விஜயமுருகன், வினோத் சாகர், மூணாறு ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவா இசையமைத்துள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் ஆர்.நாகராஜன் வழங்கும் இப்படம் தனது மகனின் இறப்புக்கு நீதி தேடிப் போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணத்தை மையமாகக் கொண்டது. தற்போது இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதல் தோற்ற போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளனர்.