ரஜினியின் ‘தர்மன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

ரஜினியின் ‘தர்மன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!
Updated on
1 min read

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி நடித்து வரும் ‘தர்மன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தி டெட்லி டாக்டர். ‘தர்மன்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இது பிரம்மாண்டமான அனுபவமாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், ரஜினி படப்பிடிப்பில் இருப்பது போலவும், அஸ்வத் மாரிமுத்து அவரை இயக்குவது போலவும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், ரஜினி நடிக்கும் இந்தப் படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. அதன் பின்பு சிபி சக்கரவர்த்தி இயக்க இருப்பதாக கூறப்பட்டது. அவர் விலகிக் கொண்ட நிலையில், தற்போது படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார்.

படத்தில் சிம்ரன், ராஷி கன்னா, யோகி பாபு உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வரும் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்.  

ரஜினியின் ‘தர்மன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!
“இரண்டு ஆண்டு வலி...” - அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த டாக்ஸிக் உறவு அனுபவம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in