‘ரஜினி 173’ படத்தின் பெயர் ‘தர்மன்’ - அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்

‘ரஜினி 173’ படத்தின் பெயர் ‘தர்மன்’ - அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்
Updated on
1 min read

‘ரஜினி 173’ படத்துக்கு ‘தர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.

முன்னதாக, ‘ரஜினி 173’ படத்தின் தலைப்பு இன்று காலை 10 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டிருந்தது. அதன்படி தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘தர்மன்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. கூடவே படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியிடப்பட்டது.

முன்னதாக, கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் இந்த படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தது. அதன்பின் சிபி சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்தது. அவர் பின்வாங்கிய நிலையில், சூப்பர் ஸ்டாரை இயக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பும் இருந்தது. இந்த நிலையில் இப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

படத்தின் டைட்டில் போஸ்டரில் மருத்துவர்கள் பயன்படுத்தும் கத்தியை நடிகர் ரஜினிகாந்த் வைத்துள்ளதால், ரஜினி மருத்துவராக நடிக்கிறாரா என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

‘தர்மன்’ படப் பெயர் அறிவிப்பு விழாவில் ரஜினி, கமல் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கலந்துகொண்டனர்.

விழாவில் பேசிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, “இது 5 ரூபாய் மருத்துவரின் படம் கிடையாது. ‘தர்மன்’ என்கிற மருத்துவரின் ஸ்வாக் ஆன பேமிலி என்டெர்டெயினர்” என்றார். மேலும், கமலின் ‘வேட்டையாடு விளையாடு’ மாதிரியான படம் இது என்றும் இயக்குநர் கூறினார். இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.

‘ரஜினி 173’ படத்தின் பெயர் ‘தர்மன்’ - அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார்
முதல்வர் விஜய் ஆக்‌ஷனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ரியாக்‌ஷனும் சரியா? - ஒரு ‘மாண்புமிகு’ பார்வை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in