‘டி​மான்ட்டி காலனி 3’ ரிலீஸ் தேதி அறி​விப்பு

‘டி​மான்ட்டி காலனி 3’ ரிலீஸ் தேதி அறி​விப்பு
Updated on
1 min read

அஜய் ஞான​முத்து இயக்​கத்​தில் கடந்த 2015ம் ஆண்டு வெளி​யாகி வரவேற்​பைப் பெற்ற படம் ‘டி​மான்ட்டி காலனி’. இதில் அருள் நிதி நாயக​னாக நடித்​திருந்​தார்.

இந்​தப் படத்​தின் வரவேற்​பைத் தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு ‘டி​மான்ட்டி காலனி’ படத்​தின் 2ம் பாகம் வெளி​யானது. இதில் அருள் நிதி ஜோடி​யாக பிரியா பவானி சங்​கர் நடித்​திருந்​தார். இதையடுத்து தற்​போது இதன் 3ம் பாகம் உரு​வாகி​யுள்​ளது.

இதில் அருள் ​நி​தி, பிரியா பவானி சங்​கர் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்​தப் படம் செப்.11ம் தேதி திரையரங்​கு​களில் வெளி​யாகும் என அறிவிக்​கப்பட்​டுள்​ளது.

‘டி​மான்ட்டி காலனி 3’ ரிலீஸ் தேதி அறி​விப்பு
பொது சிவில் சட்டம் கொண்டு வர மகாராஷ்டிர அரசு திட்டம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in