

சுங்கத்துறை விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள க்ரைம் த்ரில்லர் திரைப்படம், ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’. ஜே.டி.சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், மைம் கோபி உள்ளிட்டோர் நடிக்கும் இப்படம், கடத்தல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் மறுபக்கம் குறித்துப் பேசுகிறது.
இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான தோ.சமய முரளி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். அவரே பின்னணி இசையும் அமைத்துள்ளார்.
இப்படம் குறித்து டி.சமய முரளி கூறும்போது, “நான் விசாரித்த பல சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாகக் கொண்ட கற்பனைக் கதை இந்தப் படம். கடத்தல், நிழல் உலகம் மற்றும் சுங்கத்துறையின் செயல்பாடுகளை சுவாரஸியமான சினிமா மொழியில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதோடு, நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பில் சுங்கத்துறை வகிக்கும் முக்கியப் பங்கைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்தப் படத்தின் நோக்கம்” என்றார்.