

ராம் நிஷாந்த், ஜேஎஸ் கவி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘பிரவுன் மணி’. ரிவர் ரூட் ஸ்டூடியோஸ் மற்றும் ரெட் ராக் ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கும் இப்படத்துக்கு தேவ் பிரகாஷ் ரீகன் இசையமைத்துள்ளார். சக்தி சுப்ரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டைட்டில் மற்றும் முதல் தோற்ற போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இப்படத்தை ரியோ ராஜ், ரமேஷ் தயாரித்துள்ளனர். கவின் ஜிடி இணை தயாரிப்பு செய்துள்ளார்.
“குடும்பம், நண்பர்கள் உறவை மையமாகக் கொண்ட இந்தப் படம், 2 நண்பர்களின் உணர்ச்சி, பொழுதுபோக்கு நிறைந்த பயணத்தைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் கதையை கொண்டது. லைவ் சவுண்டுடன் உருவாகியுள்ள இப்படம், சவுண்ட்ஹாலிக் குழுவின் ஒலித் தொழில்நுட்ப வடிவமைப்பில், இயல்பான, ஆழமான ஒலி அனுபவத்தை வழங்கும். தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரொடக் ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்று படக்குழு தெரிவித்துள்ளது.