கலாச்சார மாற்றங்களை பேசும் ‘பிரேக் பாஸ்ட்’

கலாச்சார மாற்றங்களை பேசும் ‘பிரேக் பாஸ்ட்’
Updated on
1 min read

விஷால் நடித்த ‘செல்​லமே’, தமன்னா நடித்த ‘ஆனந்த தாண்​ட​வம்’ படங்​களை இயக்​கிய, காந்தி கிருஷ்ணா இப்​போது இயக்​கி​யுள்ள படம் ‘பிரேக் பாஸ்ட்’. புது​முகங்​கள் ராணவ், ரோஸ்​லின், க்ரித்​திக் மோகன், அமிதா ரங்​க​நாதன் மற்​றும் அர்ச்​ச​னா, சம்​பத்​ராம், ரவிமரியா நடித்​துள்​ளனர்.

பிரேம் கிளாசிக் பிக்​சர்ஸ் சார்​பில் கிரிஜா வரத​ராஜ் தயாரித்​துள்​ளார். ஜி.​வி.பிர​காஷ் குமார் இசை அமைத்​துள்​ளார். ஏப்​.24-ல் வெளி​யாகும் இப் படத்​தின் இசை வெளி​யீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்​து​கொண்​டனர்.

நடிகை அமிதா பேசும்​போது, “காதலிப்​பது எல்​லோருக்​கும் எளிது. ஆனால், காதலில் நிலைத்து நிற்​பது கடினம். ஏன் என்​றால் நம் எல்​லோரிட​மும் ஒரு வெற்​றிடம் இருக்​கிறது. அதை நிரப்ப நம் தாயின் அன்​பை, துணை​யிடம் தேடும்​போது தான் பிரச்​சினை ஆரம்​பிக்​கிறது. திரு​மணம் ஆனவர்​கள் இந்​தப் படத்தை நிச்​ச​யம் பார்க்க வேண்​டும். சின்ன ஈகோ கூட எப்​படி பெரிய பிரச்​சினை​யாக மாறுகிறது என்​பதை இந்​தக் கதை சொல்​லும்” என்​றார்.

இயக்​குநர் காந்தி கிருஷ்ணா, “இதில் அனை​வரும் சிறந்த நடிப்பை வெளிப்​படுத்​தி​யுள்​ளனர். இசையமைப்​பாளர், ஒளிப்​ப​தி​வாளர், தயாரிப்​பாளர்​கள் அனை​வருக்​கும் மிக்க நன்​றி. கடந்த 10 வருடத்​துக்குள் நடந்த கலாச்​சார மற்​றும் உளவியல் ரீதி​யான மாற்​றங்​களைப் பற்றி இதில் பேசி​யிருக்​கிறோம். இந்த மாற்​றங்​களால் நிறைய சந்​தோஷங்களை இழந்​திருக்​கிறோம். அதை எப்​படிச் சரி செய்​ய​லாம் என்று இப்​படத்​தில் சொல்​லி​யிருக்​கிறோம்” என்​றார்.

கலாச்சார மாற்றங்களை பேசும் ‘பிரேக் பாஸ்ட்’
‘Mr X’ விமர்சனம் - ஆர்யாவின் ஸ்பை த்ரில்லர் எப்படி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in