திரையுலகில் 50 ஆண்டுகள் - பாக்யராஜுக்கு பாராட்டு

திரையுலகில் 50 ஆண்டுகள் - பாக்யராஜுக்கு பாராட்டு
Updated on
1 min read

திரைப்பட நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ், திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

இதையொட்டி, அவரது பிறந்தநாளான நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, பாக்யராஜுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு, கமல்ஹாசன் எம்.பி., நடிகர் பார்த்திபன், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன், பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் நடிகர்கள், திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

முன்​ன​தாக செய்​தி​யாளர்​களை பாக்​ய​ராஜ் சந்​தித்​தார். அப்​போது அவர் கூறிய​தாவது: திரைத்​துறை​யில் 50 ஆண்​டு​கள் என்​பதை நினைத்​துக் கூட பார்க்க முடிய​வில்​லை. ‘16 வயதினிலே’ படத்​தில் எனக்கு முதல் முறை​யாக பணிபுரிய வாய்ப்பு கிடைத்​தது.

வாய்ப்பு தேடும் காலத்​தில் பலரிடம் என்​னுடைய உண்​மை​யான பெயரைச் சொல்​லாமல் கோவை ராஜா என்று கெத்​தாகச் சொல்​லிக் கொள்​வேன். ‘16 வயதினிலே’ படத்​தில் தான் என் பெயரை பாக்​ய​ராஜ் என்று வைத்​தேன்.

என்​னுடைய அம்மா எனக்கு வைத்த பெயர் இது​தான். டைட்​டில் கார்​டில் பார்த்​து​விட்​டு, இது யார் பெயர் என்று இயக்​குநர் பார​தி​ராஜா கேட்​டார்.

பிறகு​தான் அது நம்​முடைய ராஜன் என்று சொன்​னார்​கள். அம்​மா​வின் பாக்​கி​யத்தை இழந்து விடக்​கூ​டாது என்​ப​தால் கே.​பாக்​ய​ராஜ் என்று வைத்​துக் கொண்​டேன்.‘கிழக்கே போகும் ரயில்’ படத்​தின் போது என்​னுடைய இயக்​குநர் எனக்​குப் பிறகு ராஜன் தான் என்று சொன்​னார். துணை இயக்​குநர், வசனகர்த்​தா,திரைக்​கதை எழுத்​தாளர், பின்பு நடிகர் என படிப்​படி​யாக வந்தேன்.

எனது தாயார், `உன்​னுடைய இயக்​குநரே உன்னை கதா​நாயக​னாக வைத்து படம் எடுப்​பார்' என்று சொன்​னார். அது உண்​மை​யிலே நடந்​தது. ஆனால் அந்த படம் வெளி​யா​வதற்கு முன்பு எனது தாயார் இறந்​தது. வருத்​த​மாக இருந்​தது. ரஜினி சாரை ‘16 வயதினிலே’ படத்​தில் பார்த்​தேன். அன்று பார்த்​தது போல இன்​றும் இருக்​கிறார். சினி​மா​வில் 50 வருடங்​கள் என்​பது இன்​னும் எனக்கு ஆச்​சரிய​மாக இருக்​கிறது.

அடுத்​த​தாக ஒரு வெப் தொடரும், ஒரு படமும் இயக்​கு​வதற்​கான பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றுக் கொண்​டிருக்​கிறது. இந்​த வருடம்​ பல புதிய முயற்​சிகளை மேற்​கொள்​ள உள்​ளேன்​.இவ்​​வாறு கே.​பாக்​ய​ராஜ் கூறினார்.

திரையுலகில் 50 ஆண்டுகள் - பாக்யராஜுக்கு பாராட்டு
“அதிகார துஷ்பிரயோகம்” - ‘ஜனநாயகன்’ படக்குழுவுக்கு இயக்குநர் அஜய் ஞானமுத்து ஆதரவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in