திரைப்படமாகிறது பவா செல்லத்துரையின் ‘நீர்’ சிறுகதை!

திரைப்படமாகிறது பவா செல்லத்துரையின் ‘நீர்’ சிறுகதை!
Updated on
1 min read

எழுத்தாளர்களின் படைப்புகள் திரைப்படமாவது இப்போது அதிகரித்து வருகின்றன. ஜெயமோகன், பூமணி, பெருமாள் முருகன் உள்ளிட்ட எழுத்தாளர்களின் கதைகள் படமாக்கப் பட்டு வரும் நிலையில் இப்போது பிரபல எழுத்தாளரும் நடிகரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை எழுதிய ‘நீர்’ என்ற கதை திரைப்படமாகிறது.

இதை ஹரிஷங்கர், சங்கீதா கல்யாண் உள்பட பலர் நடித்து வெளியான ‘பராரி’ படத்தை இயக்கிய எழில் பெரியவேடி இயக்குகிறார்.

சினிமாவுக்காக ‘நீர்’ கதையில் சில மாற்றங்களைச் செய்து இயக்க இருக்கிறார். கிணறு வெட்டுவது தொடர்பான கதையைக் கொண்ட இப்படத்தில் விஜய் சேதுபதி, மம்மூட்டி, மிஷ்கின் இணைந்து நடிக்கப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. முடிந்ததும் முறையான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

திரைப்படமாகிறது பவா செல்லத்துரையின் ‘நீர்’ சிறுகதை!
சென்னையிலிருந்து டெல்லி சென்ற விமானத்தில் பணிப் பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்: திமுக கவுன்சிலர் நண்பருடன் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in