

நடிகர் சூரி, ‘கொட்டுக்காளி’, ‘விடுதலை’, ‘மாமன்’ படங்களுக்குப் பிறகு ‘மண்டாடி’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படத்தை ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படங்களை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்குகிறார்.
இதை அஜித்குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’, பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டியூட்’ படங்களைத் தயாரித்த, தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. ‘பிளட் பாலோடு த ஃபிளட்’ என்ற டேக் லைனுடன் இப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.