ஹரி இயக்கத்தில் அதர்வா?

ஹரி இயக்கத்தில் அதர்வா?
Updated on
1 min read

ஹரி இயக்கவுள்ள அடுத்த படத்தில் அதர்வா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

’தமிழ்’ படத்துக்குப் பிறகு பிரசாந்த் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ஹரி இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்படம் கைவிடப்பட்டது உறுதியாகி இருக்கிறது. ஏனென்றால், தற்போது அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தினை ஹரி இயக்கவுள்ளார்.

ஹரி – அதர்வா இணையும் படத்தினை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தை சுமுகநிலையை எட்டியிருப்பதாகவும், விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு இருக்கும் எனவும் கூறப்படுகிறது. முந்தைய ஹரி படங்கள் போலவே, இப்படமும் கமர்ஷியல் பாணியில் இருக்கும் என்கிறார்கள்.

பிரசாந்த் படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, தெலுங்கில் ரவி தேஜா நடிக்கும் படத்தினை இயக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் ஹரி. அதுவும் அடுத்தகட்டத்துக்கு நகராத காரணத்தினால், தற்போது அதர்வா நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார் ஹரி. 2024-ம் ஆண்டு விஷால் நடித்த ‘ரத்னம்’ படத்துக்குப் பிறகு ஹரி இப்படத்தினை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹரி இயக்கத்தில் அதர்வா?
தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ.1,200 உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in