தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ.1,200 உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு

தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ.1,200 உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு
Updated on
1 min read

சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் இன்று (ஜூலை 3) பவுனுக்கு ரூ.1,200 என உயர்ந்துள்ளது. இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.5,000 என அதிகரித்துள்ளது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படை​யில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த மே மாதம் தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதையடுத்து தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கடந்த வாரம் தங்கம் விலை அதிரடியாக சரிவு கண்டது. இந்தச் சூழலில் தங்கம் விலை கடந்த நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று காலை மற்றும் மற்றும் மாலை என தங்கம் விலை இரு முறை உயர்ந்தது.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,400 என விலை உயர்ந்தது. அதற்கு முந்தைய நாள் (ஜூலை) மாலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,200 என உயர்ந்தது. அன்று காலை தங்கம் விலை பவுனுக்கு ரூ.800 என குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய விலை விவரம்

இன்று சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,700-க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,09,600-க்கும் விற்பனையாகிறது. கடந்த நான்கு நாட்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.4,000 என உயர்ந்துள்ளது கவனிக்கத்தக்கது.

24 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.174 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,956-க்கு விற்பனையாகிறது. 18 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.153 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11,440-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.5 என விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.260-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்து, ஒரு கிலோ ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை பவுனுக்கு மேலும் ரூ.1,200 உயர்வு; வெள்ளி விலையும் அதிகரிப்பு
கடைசி நிமிட VAR சர்ச்சையில் குரோஷியாவை வெளியேற்றிய போர்ச்சுகல் - FIFA WC 2026

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in