

அசோக் செல்வன் - நிமிஷா சஜயன் இணைந்து, ரொமான்டிக் த்ரில்லர் கதையில் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனலுடன் இணைந்து தயாரிக்கும் படம் இது.
இதை அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கியுள்ளார். திபு நினன் தாமஸ் இசை அமைத்துள்ள இப்படத்துக்கு புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் கதைக்களத்துக்கு ஏற்ப பெரும்பாலான காட்சிகள் இரவு நேரங்களில் படமாக்கப்பட்டுள்ளன. இதன் படப்பிடிப்பு இப்போது நிறைவடைந்துள்ளது. போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.