‘அன்பில் அவன்’ மறக்க முடியாத திரை அனுபவமாக இருக்கும்! - அசோக் செல்வன் நம்பிக்கை

‘அன்பில் அவன்’ மறக்க முடியாத திரை அனுபவமாக இருக்கும்! - அசோக் செல்வன் நம்பிக்கை
Updated on
1 min read

அசோக் செல்​வன், ப்ரீத்தி முகுந்​தன், சபு மோன், அப்​துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்​ளிட்ட பலர் நடித்​துள்ள படம், ‘அன்​பில் அவன்’. ஆர்​.​கார்த்​தி​கேயன் இயக்​கி​யுள்​ளார். ஐங்​கரன் இன்​டர்​நேஷனல் மற்​றும் ஹேப்பி ஹை பிக்​சர்ஸ் சார்​பில் கே.கருணா​மூர்த்​தி, அசோக் செல்​வன், அபிநயா செல்​வம் இணைந்து தயாரித்​துள்ள இப்​படத்​தின் செய்​தி​யாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது.

படக்​குழு​வினர் கலந்து கொண்​டனர். விழா​வில் அசோக் செல்​வன் பேசும்​போது, “சினிமா என்​றால் ஏதாவது தாக்​கத்தை ஏற்​படுத்த வேண்​டும் என்று நினைப்​பேன். அப்​படிப்​பட்ட படத்​தில்​தான் நடிக்க வேண்​டும் என்று இருக்​கிறேன். நல்ல கதைகள், நல்ல கதா பாத்​திரம் பார்த்து நடிக்க வேண்​டும். ஒரு படத்​தின் போஸ்​டரில் என் பெயர் போட்​டிருந்​தால் 100 சதவீதம், எனது உழைப்பு அதில் இருக்க வேண்​டும் என்று நினைப்​பேன்.

இந்​தப் படத்​தில் எனக்​குப் பல நண்​பர்​கள் கிடைத்​தார்​கள். பல அனுபவங்​களைக் கற்​றுக் கொண்​டோம். இந்​தப் படத்​தைப் பெரிய படமாக்​கியது பீட்​டர் ஹெய்ன் மாஸ்​டர்​தான். பெரிய படங்​களில் தொடர்ந்து பணி​யாற்​று​பவர் இது மாதிரி சின்ன படத்​துக்கு பணி​யாற்​று​வாரா என்று சந்​தேக​மாக இருந்​தது. ஆனால் அவர் சிறந்த வகை​யில் ஆக் ஷன் காட்​சிகளை உரு​வாக்கி இருக்​கிறார். இந்​தப் படம் மறக்க முடி​யாத திரையரங்க அனுபவ​மாக இருக்​கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்​டேன். ஆனால் நல்ல திரையரங்க அனுபவ​மாக இருக்​கும்” என்​றார். அக்​.2-ம் தேதி இப்​படம் வெளி​யாகிறது.

‘அன்பில் அவன்’ மறக்க முடியாத திரை அனுபவமாக இருக்கும்! - அசோக் செல்வன் நம்பிக்கை
ரஜினியின் ‘தர்மன்' படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக நூதன மோசடி: கமல்ஹாசனின் உதவியாளர் புகாரில் வழக்குப்பதிவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in