திரைத் தெறிப்புகள்: ஆஷா போஸ்லே கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை

திரைத் தெறிப்புகள்: ஆஷா போஸ்லே கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை
Updated on
2 min read

மறைந்த பழம்பெரும் பாடகி ஆஷா  போஸ்லேவின் பிறந்தநாளில் வெளியான அவரது கடைசி பாடல் முதல் தனது படத்தின் முதல் பாடல்  வெளியீட்டு தேதியை அறிவித்த ரவி மோகன் வரை இன்றைய திரைத் தெறிப்புகள் இவை...

 > மறைந்த பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே கடைசியாகப் பாடிய திரைப்படப் பாடல் அவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது. 'ஓம் கா ஹரி' என்ற படத்தில் இடம்பெற்றுள்ள இப்பாடல் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

> ‘அயம் கேம்’ படத்தின் சக்சஸ் ரிசல்ட்டால் துள்ளலில் இருக்கும் துல்கர் சல்மான், தனது அப்பா மம்மூட்டியின் இந்தப் பிறந்த நாளில் ‘மிகவும் மகிழ்ச்சியான பிறந்த நாள் அப்பா. உங்களது தோள்கள் தான் இவ்வுலகில் எனக்குப் பாதுகாப்பான இடம்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.

> தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவரானதும் இயக்குநர் சேரன் சங்க நிர்வாகிகளுடன் கமலைச் சந்தித்தார். அடுத்ததாக இக்குழு ரஜினியையும் சந்தித்தது. இந்தச் சந்திப்பின் போது தான் ரஜினியும் திறமையான ஸ்கிரிப்ட் ரைட்டர் என்று சேரன் உணர்ந்து கொண்டாராம்.

> நடிகர் பார்த்திபன் இந்திப் படத்தில் நடிக்கிறார். அந்த அனுபவத்தை ‘அர்ஜுன் ராம்பால் போன்ற திறமை மிகு வேற்று மொழி நடிகர்களுடன் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசி நடிப்பது புது அனுபவம்’ என சமூகவலைதளத்தில் சிலாகித்து இருக்கிறார்.

> மறைந்த இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா நடித்த கடைசி படமான 'புலவர்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. முருகையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் செப்.25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

> சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் இணைந்திருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தீபாவளிக்கு வருவதாக இருந்த இப்படம் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ வருகையால் பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 > தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் செப்.10 முதல் 16 வரை பிரிட்டன் பயணம் மேற்கொள்கிறார். இதே சமயத்தில் லண்டனில் நடிகர் அஜித் பங்கேற்கும் கார் பந்தயமும் நடப்பதால் விஜய் அதை நேரில் பார்க்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.

> விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா ஜோடி 3-வது முறையாக இணைந்து நடிக்கும் 'ரணபலி' திரைப்படத்தின் டீசர் நாளை (செப்.9) வெளியாகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் அக்.16-ல் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

> நமது அடையாளத்தை திருமணம் தீர்மானிப்பது கிடையாது. திருமணம் இன்றியே நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். நீங்கள் திருமண பந்தத்தில் இணையப் போகிறீர்களா அல்லது மகிழ்ச்சியாக இருக்கப் போகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் எம்பி-யும் நடிகையுமான ரம்யா கூறியுள்ளார்.

> நடிகர் ரவி மோகன் யோகி பாபுவை நாயகனாக வைத்து இயக்கி தயாரிக்கும் படம் 'ஆன் ஆர்டினரி மேன்'. பாடகி கெனிஷா ஃபிரான்சிஸ் முதல்முறையாக இசையமைக்கும் இப்படத்தின் முதல் பாடலான 'ஹையர்' 10-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைத் தெறிப்புகள்: ஆஷா போஸ்லே கடைசி பாடல் முதல் ரவி மோகன் அறிவிப்பு வரை
அசோக் செல்வனின் ‘அன்பில் அவன்’ செப்.25-ல் ரிலீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in