அருண் விஜய்யை இயக்கும் முத்தையா

அருண் விஜய்யை இயக்கும் முத்தையா
Updated on
1 min read

அருண் விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை முத்தையா இயக்கவுள்ளார்.

திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசினார். அப்போது அருண் விஜய், “அடுத்து நாயகனாக முத்தையா இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் இருந்து தொடங்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

‘ரெட்ட தல’ படத்தினைத் தொடர்ந்து ‘பார்டர்’ படமும் விரைவில் வெளியாகும். அதுவும் விரைவில் வெளியாகவுள்ளது” என்று தெரிவித்துள்ளார். அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள படம் ‘பார்டர்’. இப்படம் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கலினால் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

முத்தையா இயக்கத்தில் அருள்நிதி நாயகனாக நடித்த ’ரேம்போ’. இப்படம் நேரடியாக சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு மிகவும் மோசமான விமர்சனங்களே கிடைத்தது. அதற்குப் பிறகு தனது மகனை நாயகனாக வைத்து ’சுள்ளான் சேது’ என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

அருண் விஜய்யை இயக்கும் முத்தையா
‘‘ஆபரேஷன் சிந்தூரின்போது தரைவழி தாக்குதலுக்கு தயாராக இருந்தோம்’’ - ராணுவ தளபதி ஜெனரல் திவேதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in