‘இருளன்’ படப்​பிடிப்​பில் அருண் விஜய் காயம்

‘இருளன்’ படப்​பிடிப்​பில் அருண் விஜய் காயம்
Updated on
1 min read

அருண் விஜய் கதா​நாயக​னாக நடிக்​கும் ‘இருளன்’ படத்தை இயக்கி வரு​கிறார் முத்தையா. இதில் வித்​தி​யாச​மான 2 தோற்றங்களில் நடிக்​கிறார் அருண் விஜய். மிர்ணா நாயகி​யாக நடிக்கும் இதில் சமுத்​திரக்​க​னி, ஜான் கொக்​கென் உள்பட பலர் முக்கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ஜிப்​ரான் இசையமைக்கிறார்.

இதன் படப்​பிடிப்பு திருநெல்​வேலி, மதுரை பகு​தி​களில் நடை​பெற்று வந்​தது. அடுத்​தக்​கட்ட படப்​பிடிப்பு சென்​னை​யில் நடை​பெற்​றது. அப்​போது ஆக் ஷன் காட்​சி​யில் பங்​கேற்​ற​போது நடிகர் அருண் விஜய் காயமடைந்​தார். அவருடைய தொடை பகு​தி​யில் தசை கிழிந்​ததை அடுத்து அதற்​கான சிகிச்​சையை மேற்​கொண்டு வரு​கிறார். இதனால் படப்​பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்​ளது.

‘இருளன்’ படப்​பிடிப்​பில் அருண் விஜய் காயம்
“தென்னிந்திய திரையுலகம் அதன் தூண்களில் ஒன்றை இழந்தது” – பிரசாத் லேப் சிவராமனுக்கு கமல் புகழஞ்சலி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in