அருள்நிதி - அமீர் இணையும் ‘வேட்ட சாமி’ க்ளிம்ஸ் வெளியீடு

அருள்நிதி - அமீர் இணையும் ‘வேட்ட சாமி’ க்ளிம்ஸ் வெளியீடு
Updated on
1 min read

அருள்நிதி - அமீர் இணைந்து நடிக்கும் ‘வேட்ட சாமி’ படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

படத்தின் க்ளிம்ஸ் காட்சியை இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அத்துடன், ‘வேட்ட சாமி’ படத்தின் க்ளிம்ஸ் காட்சியை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரர் அருள்நிதிக்கும் அமீர் சாருக்கும், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார். 

அருள்நிதி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை எம்.செல்வக்குமார் இயக்குகிறார். படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஒரு நிமிடத்துக்கும் குறைவாக ஓடும் இந்தக் க்ளிம்ஸ் காட்சியில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிய கிராம கோயில் காட்டப்படுகிறது. தொடர்ந்து வில்லிசையை ஜென்ஸீ தலைமுறைகளிடம் கொண்டு சேர்த்த மாதவியின் குரலில் சுடலைமாடன் சாமி பாடல் ஒலிக்கிறது.

தொடர்ந்து சாமியாடி அருள்நிதி வேட்டைக்கு போகும் சுடலையாக காட்டப்படுகிறார். அமீர் சாமக் கொடையில் ஆடு வெட்டுகிறார். இந்த 59 விநாடிகளும் சுடலைமாடன் வேட்டைக்கு செல்லும்போது அடிக்கும் ஒற்றை அடியே பின்னணி இசையாக ஒலிக்கிறது.

சின்னத்தாய் படத்துக்கு பிறகு 34 ஆண்டுகள் கழித்து  தென்மாவட்டத்து காவல் தெய்வமான சுடலைமாடனின் கதை திரைக்கு வர இருப்பதை இந்த க்ளிம்ஸ் காட்டுகிறது.

அருள்நிதி - அமீர் இணையும் ‘வேட்ட சாமி’ க்ளிம்ஸ் வெளியீடு
எதிர்மறை விமர்சனம்: யூடியூபர்களுக்கு ‘டாக்ஸிக்’ படக்குழு நோட்டீஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in