ஜான் டோ: அர்ஜுன் தாஸுக்கு முதல் காக்கி!

ஜான் டோ: அர்ஜுன் தாஸுக்கு முதல் காக்கி!
Updated on: 
1 min read

அர்ஜுன் தாஸ் முதன்முதலாக காவல் அதிகாரியாக நடித்திருக்கும் ‘ஜான் டோ’ (John Doe) படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டிருக்கிறது அப்படத்தைத் தயாரிக்கும் ‘பாகுபலி’ பட நிறுவனமான அர்கா மீடியா ஒர்க்ஸ்.

மதுமிதா இயக்கும் இப்படத்தில், நடிப்பில் மிரள வைக்கும் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ப்ரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, முஜீப் மஜீத் இசையமைத்திருக்கிறார்.

“ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, குற்றவாளியா, காணாமல் போன குழந்தையா அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒருவரா ஆகிய கேள்வி களுக்கான பதிலைத் தேடிப் பயணிக்கும் சந்துரு என்கிற காவல் அதிகாரியின் தேடல்தான் படம்” என்கிறார் இயக்குநர்.

ஜான் டோ: அர்ஜுன் தாஸுக்கு முதல் காக்கி!
கடவுளுக்கும் சொல்லித் தரும் கவிஞன்! | எண்ணமெல்லாம் கண்ணதாசன் 3

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in