

சத்யா சிவா இயக்கத்தில், உறியடி விஜய்குமார், கயல் ஆனந்தி நடிக்கும் படம் ‘அறிவு’. மூவிட்ரோன் நிறுவனம் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் நேற்று தொடங்கியது.
இதில் ஐ. எம்.விஜயன், சிங்கம்புலி, தீபா சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை தில் ராஜு மேற்கொள்கிறார்.
பெண் உரிமைகளை மையமாக கொண்டு வலுவான சமூகச் செய்தியுடன் உருவாகவுள்ள இதன் படப்பிடிப்பு இடுக்கி, தேனி மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் நடைபெற இருக்கிறது. படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன.