‘அன்பில் அவன்’ பேசுவது எதை? - அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் விவரிப்பு

‘அன்பில் அவன்’ பேசுவது எதை? - அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் விவரிப்பு
Updated on
1 min read

ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்துக்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் அசோக் செல்வனுடன் பிரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.

படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதுகிறார். ஒளிப்பதிவை கௌதம் ராஜேந்திரனும், படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வாவும் மேற்கொள்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.‌ 

இந்தப் படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து  தயாரிக்கின்றன.

இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் டீசர் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் அபிநயா செல்வம், கவிதா பாண்டியன், நடிகர் அசோக் செல்வன், நடிகை ப்ரீத்தி முகுந்தன், இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர், ‘ஓ மை கடவுளே’ படத்துக்குப் பிறகு எங்களுடைய தயாரிப்பில் வெளியாகும் 2-வது படம் இது. படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்து செப்டம்பரில் வெளியிடுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம்’ என்றார்.

இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் பேசுகையில், ‘அன்பில் அவன்’ கனவைப் பற்றி பேசும் படம். அதிலும் பெண்களின் கனவு, அதற்கான மெனக்கடல், போராட்டம், சவால்கள் பற்றி உணர்வுபூர்வமாகவும், காதலுடனும் பேசும்.’ என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், ‘அன்பில் அவன்’ என் இதயத்துக்கு நெருக்கமான படைப்பு. இந்தப் படத்துக்காக நான் நீண்ட நாட்கள் காத்திருக்கிறேன். இந்தப் படம் திருமணம் ஆகாத பெண்களுக்கும் திருமணமான பெண்களுக்கும் பிடிக்கும்’ என்றார்.

அசோக் செல்வன் பேசுகையில், ‘இந்தப் படத்தை பொறுத்தவரை கதையாகப் பார்த்தால் இதற்கு முன் இதேபோல் நிறைய கதை வந்திருக்கிறது. ஆனால் அதன் ஸ்க்ரீன் பிளே, அது வழங்கக்கூடிய திரை அனுபவம் நிச்சயம் புதிதாகவும் ரசிக்கக் கூடியதாகவும் இருக்கும்’ என்றார்.

‘அன்பில் அவன்’ பேசுவது எதை? - அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் விவரிப்பு
ரஜினியின் ‘தர்மன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in