

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன், அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். “காதல் கதைக்களத்துடன், அழகான உணர்வுகளையும் கலந்து, சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளது. செப்.25-ல் வெளியாகும் இப்படத்தின் கதையை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்” என படக்குழு தெரிவித்துள்ளது.