

‘ஜமா’ பாரி இளவழகன் இயக்கி, நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு என பலர் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைத்துள்ளார். நியோ கேசில் கிரியேஷன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ளனர்.
சென்னையின் பெரம்பூர் பகுதியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தத் திரைப்படம், வெவ்வேறு கலாச்சாரப் பின்னணியைச் சேர்ந்த இருவரின் காதலை மையமாகக் கொண்டது. வடசென்னை மிடில்கிளாஸ் குடும்ப வாழ்க்கை, காதல் மற்றும் நகைச்சுவை கலந்த சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 17-ல் வெளியாகிறது.