அஜித்தின் ‘மங்காத்தா’ ஜன.23-ல் மறுவெளியீடு

அஜித்தின் ‘மங்காத்தா’ ஜன.23-ல் மறுவெளியீடு
Updated on
1 min read

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்குமார், த்ரிஷா, அர்ஜுன், அஞ்சலி உள்பட பலர் நடித்து 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மங்காத்தா’. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது.

அஜித்தின் 50-வது படமான இதில் அவர் தனித்துவமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். க்ளவுட் நைன் நிறுவனம் தயாரித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது. தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகிறது. ஜன. 23-ம் தேதி திரையரங்குகளில் மறு வெளியீடு செய்யப்பட இருப்பதாக சன்-பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

அஜித்தின் ‘மங்காத்தா’ ஜன.23-ல் மறுவெளியீடு
“கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது” - மாணிக்கம் தாகூர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in