விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்

விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்
Updated on
1 min read

நடிகர் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்தை அடுத்​து, ஆதிக் ரவிச்​சந்​திரன் இயக்​கும் ‘டேர்​டெ​வில்’ படத்​தில் நடிக்​கிறார். அவருடைய சர்​வ​தேச கார் ரேஸ் பயணத்​தை​யும், அதில் அவர் எதிர்​கொண்ட சவால்​களை​யும் மையப்​படுத்தி உரு​வாகி​யுள்ள ‘கிளாடியேட்​டர்​ஸ்’ என்ற ஒரு மணி நேர ஆவணத் திரைப்​படம் அக்​டோபர் மாதம் வெளி​யாக இருக்​கிறது.

இதற்​கிடையே கார் ரேஸிங்​கில் அதிக ஈடு​பாடு கொண்ட அஜித்​கு​மார், தனது பெயரில் சொந்​த​மாக ரேஸிங் அணி ஒன்றை உரு​வாக்கி சர்​வ​தேச தொடர்​களில் பங்​கேற்று வரு​கிறார்.

தற்​போது ஐரோப்​பா​வில் நடை​பெற்று வரும் மிச்​சலின் லீ மேன்ஸ் கோப்​பைக்​கான போட்​டி​யில் பங்​கேற்​றுள்​ளார். அப்​போது அஜித்​தின் கார் திடீரென கட்​டுப்​பாட்டை இழந்து விபத்​துக்​குள்​ளானது. இதில் காரின் முன்​பகுதி சேதமடைந்​தது. அஜித் காயமின்றி தப்​பி​னார்.

அஜித் கார் பந்​த​யங்​களில் விபத்​தைச் சந்​திப்​பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்​பும் பல்​வேறு நாடு​களில் நடை​பெற்ற போட்​டிகளில் விபத்​துகளை சந்​தித்​துள்​ளார்​.

விபத்தில் மீண்டும் சிக்கிய அஜித்குமார்
‘டாக்ஸிக்’ பெண்களுக்கு எதிரான படமா? - யஷ் விளக்கம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in