

மலேசியாவில் கார் ரேஸ் பந்தயத்தில் நடுவே ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் செய்திருக்கிறார்.
மலேசியாவில் நடைபெற்றும் கார் ரேஸ் பந்தயத்தில் அஜித் தனது அணியினருடன் கலந்துகொண்டுள்ளார். இதனை ஆவணப்படமாகவும் காட்சிப்படுத்தி வருகிறார் இயக்குநர் விஜய். இதனால் ரசிகர்களை சந்திப்பது, புகைப்படம் எடுத்துக் கொள்வது என அனைத்தையும் செய்து வருகிறார் அஜித்.
இந்நிலையில், கார் ரேஸ் நடைபெறும் மைதானத்துக்கு ரசிகர்கள் அஜித்தை பார்த்து உற்சாகத்தில் கத்திக்கொண்டே இருந்தார்கள். அப்போது அவருக்கு பக்கத்தில் இருந்த அவரது அணி நிர்வாகத்தினரிடம், “மற்ற கார் ரேஸ் அணிகளைத் தொந்தரவு செய்யாதீர்கள். இது எனது நற்பெயருக்கு மட்டுமல்ல, நமது கார் ரேஸ் அணியின் பெயருக்கும் ஆபத்தை உருவாக்கும். தயவு செய்து நீங்களே அதனை உணர்ந்து நடந்துக் கொள்ளுங்கள். அனைத்து ரசிகர்களுக்கும் இதனைச் சொல்லுங்கள்” என்று தெரிவித்துள்ளார் அஜித்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சின்ன வயது ரசிகர் உங்களை போல் ஆக வேண்டும் என்று அஜித்திடம் கேட்டுள்ளார். அதற்கு எனது வாழ்க்கை மிகவும் கடினமானது என்று கூறிவிட்டு, அந்த பையனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அஜித். இந்த வீடியோ பதிவும் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது.