ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்​கும் ‘அண்டர் 18’

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்​கும் ‘அண்டர் 18’
Updated on
1 min read

அறி​முக இயக்​குநர் கார்த்​திக் பெரு​மாள்சாமி இயக்​கும் படம், ‘அண்​டர் 18’. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், விக்​ராந்த், கிஷோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்​கின்​றனர். ‘மெட்​ராஸ்​காரன்’ படத்​தைத் தொடர்ந்​து, எஸ்​.ஆர். புரொடக் ஷ்ன்ஸ் சார்​பில் பி. ஜெகதீஸ் தயாரிக்​கிறார்.

வேல்​ராஜ் ஒளிப்​ப​திவு செய்​யும் இப்​படத்​துக்கு சாம் சி.எஸ். இசை அமைக்​கிறார். இதன் டைட்​டில் லுக்கை இயக்​குநர் வெற்​றி​மாறன் வெளி​யிட்​டார்.

“உண்​மைச் சம்​பவங்​களின் தாக்​கத்​துடன் கூடிய ஓர் உணர்​வுப்​பூர்​வ​மான கதை​யாக இந்தப் படம் இருக்கும். சமூக யதார்த்​த​மும், குடும்ப உணர்​வு​களும் கலந்து உருவாகும்படம் இது.

குற்ற உலகின் கொடூரமுகத்​தை​யும், அதனால் பாதிக்கப்​படும் குடும்​பத்​தின் உணர்வு களை​யும், எமோஷனல் டிரா​மா​வாக இப்​படம் பேசும். தமிழகத்​தின்அறியப்​படாத க்ரைம் பின்​னணி​களை நேரில் ஆய்வு செய்து இப்​படம் உருவாகிறது” என்​கிறது படக்​குழு இதன் படப்​பிடிப்பு விரை​வில் தொடங்க இருக்​கின்​றன.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்​கும் ‘அண்டர் 18’
பாஜக கைவிட்ட நிலையில் திமுக பக்கம் சாயும் ஓபிஎஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in