தனுஷுடன் ஜோடி சேரும் நடிகை சாரா அர்ஜுன்!

தனுஷுடன் ஜோடி சேரும் நடிகை சாரா அர்ஜுன்!
Updated on
1 min read

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள `கர' படம் ஏப்.30ம் தேதி வெளியாகிறது. இதில் மமிதா பைஜு நாயகியாக நடித்துள்ளார். இதையடுத்து அவர் தமிழரசன் பச்சமுத்து இயக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்க இருந்தார்.

தமிழில் விஜய் சேதுபதியுடன் ‘ஏஸ்’ படத்தில் நடித்த கன்னட நடிகையான ருக்மணி வசந்த், ‘மதராஸி’யில் சிவகார்த்திகேயனுடன் நடித்திருந்தார். ‘காந்தாரா சாப்டர் - 1’ படம் மூலம் பிரபலமானார். அடுத்து, ‘டாக்ஸிக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் இப்படத்தில் இருந்து விலகி விட்டார் என்கிறார்கள்.

பிரசாந்த் நீல் - ஜூனியர் என்டிஆரின் `டிராகன்' படத்துக்கு அதிக நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால் இப்படத்தில் இருந்து விலகியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க சாரா அர்ஜுனிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சாரா அர்ஜுன், ‘துரந்தர்’ வெற்றி மூலம் முன்னணி நடிகையாகி இருக்கிறார்.

தனுஷுடன் ஜோடி சேரும் நடிகை சாரா அர்ஜுன்!
Fair Play: டாக்ஸிக் உறவை கச்சிதமாக கையாளும் எமிலி | திரை தேவதைகள் 13

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in